வியாழன், 14 அக்டோபர், 2010

ஏன் மறந்தீர்கள்

மழை இல்லையென்று
கழுதைகளுக்கும் தவளைகளுக்கும்
மணம் முடித்துவைத்த 
மாமேதைகளே, 
ஏன் மறந்தீர்கள் 
விதவைகளை...


வாரிசு வேண்டி
கோயில்வாசம் செய்யும்
கோமான்களே,
ஏன் மறந்தீர்கள் 
அனாதைகளை...


பிறர்முடிவை எதிர்நோக்கும்
சூரர்களே, 
ஏன் மறந்தீர்கள் 
எதிர்வரும் உம்முடிவை...


இயலாதென்று தெரிந்தும்
பொன்னகையை எதிர்பார்க்கும் 
சம்பந்தியரே,
ஏன் மறந்தீர்கள் 
பூவையரின் புன்னகையை...


இருக்கையில் ஓடிவிட்டு
இறந்தபின் ஓலமிடும் 
உறவுகளே,
ஏன் மறந்தீர்கள் 
பாசபந்தத்தை...


பக்தியென்று மூடத்தனமாய்
பிறவுயிர்களை பலியிடும்
பாவிகளே,
ஏன் மறந்தீர்கள் 
உங்கள் உயிரை...


இன்றுஇளமையென்று
முதுமையை உதாசிக்கும்
இளையோரே,
ஏன் மறந்தீர்கள் 
எதிர்வரும் முதுமையை...


ஊனம் தடையென்று
உழைப்பை மறந்த
திறமைசாலிகளே,
ஏன் மறந்தீர்கள்
உங்கள் திறமையை...


பணம் பணமென்று
பணத்தை கட்டியழும்
கருமியரே,
ஏன் மறந்தீர்கள்
பணத்தால் இழந்த பாசத்தை...


நெரிசல்களில்
உரசுவதற்க்கே வரும்
சமூகவிரோதிகளே,
ஏன் மறந்தீர்கள்
பெற்றவளை பிறந்தவளை...


நினைத்தது கிடைகாததால்
நின்றுபோன
நிர்பந்தக்காரர்களே,
ஏன் மறந்தீர்கள்
கிடைத்ததை நினைக்க...


பிறரின் வெற்றியை
இடறும்
இறுமாப்புடையோரே,
ஏன் மறந்தீர்கள்
உங்களின் ஆற்றலை...
                                              _ வேலுச்சாமி

9 கருத்துகள்:

  1. இருக்கையில் ஓடிவிட்டு
    இறந்தபின் ஓலமிடும்
    உறவுகளே,
    ஏன் மறந்தீர்கள்
    பாசபந்தத்தை...நன்று

    பதிலளிநீக்கு
  2. தங்களின் முதல் படைப்பே மிகவும் முத்தான படைப்பாக உள்ளது! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. கருத்துள்ள கவிதை நண்பா!

    பதிலளிநீக்கு
  4. நல்ல கருத்துக்கள்..அது கவிதையாக இன்னும் கொஞ்சம் முயற்சி வேண்டும்...

    பதிலளிநீக்கு
  5. நான் எழுதிய ‘ஊனம்” கவிதையும் இக்கவிதையும் ஒத்த கருத்துள்ளது. பொதுவாக, கவிஞன் மற்ற கவிஞனின் முகம்பார்க்கும் கண்ணாடி. வாழ்த்துக்கள் போராளி என்றும் போராடுக;பாடுக;விடியலுக்கு விடைத் தேடுக.
    எனது “ஊனம்” கவிதை:
    ஊனம்"



    ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும்

    ஞானமற்ற மனிதா...!

    நீயும் ஒரு நாளில் நிலத்தில்

    சாயும் வேளையில்

    உயிரும் போய்விடும்;

    பெயரும் போய்விடும்..!

    உடல் முழுதும் செயலற்று

    கிடக்கும்;"ஊனமுற்ற"நிலையே

    கிடைக்கும்....





    வேதத்தைக் காணாத கண்கள்;

    ஓதாத நாக்கு;பிடிக்காத கைகள்;

    உள்ளத்தால் ஊனமுற்றவைகளே..



    அகம்பாவம் நிறைந்ததால்,

    அகம்- பாவத்தில் உறைந்ததால்;

    சுகம் தேடும் உள்ளமே- சுவனத்து

    சுகம் தேடவேயில்லையே...!!



    கருவறையே உலகமென்று

    கருதியே சயனித்திருந்தாய்,

    ஓருலகில் வந்து உதிப்பாயென்று

    ஒருபோதும் நினைக்காதது போலவே;

    மறு உலகம் உண்டென்பதை

    மறந்து விட்டாய் மனமே..!



    இரணமும்; மரணமும்

    இரகசியமாய்த் தான்

    இறைவனும் வைத்து விட்டான்;

    இரண்டையும் நோக்கியே

    இரவும் பகலும் பயணிக்கின்றோம்......



    இரணத்தின் முடிவு;

    மரணத்தின் துவக்கம்



    சென்ற நிமிடம்-

    நின்று பேசியவர்கள்

    சென்ற இடம் எங்கே?

    சென்று பார்த்து வா;

    நின்று விடும் கற்பனைகள் மெதுவா(க)



    ஒன்றுமே யில்லாதிருந்த உன்னை

    நன்றாக உருவமமைத்த இறைவனே

    ஒன்றுமே யில்லாமல் உருக்குலைத்து- மீண்டும்

    ஒன்று சேர்க்கும் நாளில் எழுப்புவான்

    உண்மை இதுவென்று உணராத உள்ளமே

    உண்மையிலே "ஊனமுற்றவை".........



    ="கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்

    00971-50-8351499

    shaickkalam@yahoo.com

    பதிலளிநீக்கு
  6. உங்களின் ஊக்கம் என்னில் ஏறபடுத்தும் தாக்கம்...
    நன்றி தோழரே..

    பதிலளிநீக்கு
  7. அருமை..
    உங்களை பதிவுலகிற்கு வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு

,