சனி, 23 அக்டோபர், 2010

கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி

ஊரிழந்து உறவிழந்து
புதையுண்டு வதையுண்டு
மாண்டவர் போக மீதம்
மீண்டவரும்
மீளாத்துயரில்...

கருவிலிருந்து உறவு
கடந்துவரும் முன்னே
கருவழித்தவன் இன்னும் உயிரோடு...

வெறியர்கள்
விட்டுச்செல்லும்
வக்கிரக் கழிவுகளைச்
சுமக்கும் குப்பைத் தொட்டிகளாய்
நம் சகோதரம்...

இனமழிய குழிபறித்த
ஈனக்கருணாக்கள்
கண்முன்னே...

சிதறுண்ட பதறுகளாய்
கதறுண்டு பார்முழுதும்
பறந்து சென்ற
உறவுகள்...

உறவென்ற உரிமை
உள்ளிருந்தும்
உடனிருந்து உதவயியலா
ஊனமாய் உறவுகள்...

நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி...

கருவாகும் உறவுக்கும்
காதினில் உரைத்திடுவோம்
கடந்துவந்த கொடுமையையும்
கடக்கவேண்டிய கடுமையையும்...

ஈனம் வீழ்ந்து
ஈழம் வெல்லும் நாள்
எல்லோர்க்கும் தீபாவளி,
அதுவரை இல்லை தீபாவளி...

எதிரிகளின்முன்
மண்டுயிட்டால் அடிமை
உறவுகளின்முன்
மண்டியிட்டால் பெருமை

உறவென்ற உரிமையில்
உளம்திறந்து மண்டியிடுகிறேன்
உணர்ந்து பாருங்கள்...

தவறாய் நினைப்பவர்கள்
மறந்து விடுங்கள்
உறவாய் நினைப்பவர்கள்
மற்றவர்க்கும் சொல்லுங்கள்...
-வேலுச்சாமி

8 கருத்துகள்:

  1. மிக அருமையான கவிதை என்பதுடன் ஆழமான வரி(லி)கள் கொண்ட கவிதை !

    பதிலளிநீக்கு
  2. //ஈனம் வீழ்ந்து
    ஈழம் வெல்லும் நாள்
    எல்லோர்க்கும் தீபாவளி,
    அதுவரை இல்லை தீபாவளி//

    வாழும் வரை போராடு
    ஈழம் பெறும் வரை துணிவோடு

    பதிலளிநீக்கு
  3. வலிக்கிறது நெஞ்சம் ....
    என்னில் வலியுண்டாக்கிய பதிவு..
    http://wp.me/pFau0-Tb

    பதிலளிநீக்கு
  4. ஊமையாய் அழுகிறேன் ..

    பதிலளிநீக்கு
  5. மனம் கனக்க செய்யும் ஒரு கவிதை

    பதிலளிநீக்கு

,