கடன்பெற்ற கொடுமைக்காய்
கடல்கடந்து போனாயே
உடன்வாழ வந்தநான்
உறைந்ததங்கு அறிவாயோ...
உண்ணுகின்ற போதிலும்
உறங்குகின்ற போதிலும்
எண்ணுகின்ற மனதிற்க்கு
என்னவுண்டு ஆறுதல்,
விட்டுப்போன நினைவுகள்
தொட்டுத்தொடரும் கனவுகள்
கட்டிவைத்தது ஆயிரம்
கொட்டித்தீர்ப்பது யாரிடம்,
பாய்விரிக்கும் போதெல்லாம்
நீயணைத்த ஞாபகம்
மெயசிலிர்க்கும் நொடிகளெல்லாம்
கைதீண்டிய நினைவுகள்...
வாய்பிறந்த வார்த்தைகள்
போய்மறைந்த வசந்தங்கள்
நீயிருந்த பொழுதுகள்
நிழலாடும் கனவுகள்...
வளருகின்ற உறவை
உறுதியிட்ட தருணம்
மலருகின்ற நினைவை
மறைத்திட்ட கொடுமை,
முகம்பார்த்து பேசிபேசி
யுகம்போன தருணங்கள்
அகந்தன்னில் ஆட்க்கொண்டு
ஆட்டுவிக்கும் வேதனைகள்,
சொட்டுவிழி பொருங்கடலில்
சோகங்களைக் கரைக்கின்றேன்
மட்டும்மனம் தவிக்கின்றேன்
மறைத்துதினம் நடிக்கின்றேன்...
எங்கேயோ நீயிருந்து
எமக்காகப் போராட
இங்கேயே நானிருந்து
இருவிழியில் நீராட,
மடிமீது சாய்ந்தயர்ந்து
மனம்போலே வாழ்ந்துயர்ந்து
மனையோடு நீயிருந்து
எனையாளும் காலமெப்போ...
-வேலுச்சாமி
நெஞ்சம் நெகிழ்ந்தது கவிதை வரிகளில்
பதிலளிநீக்குஅருமையான வரிகள் நண்பரே பாராட்டுக்கள்
பதிலளிநீக்குதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in